வேலூர்:காட்பாடி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண எம்எல்ஏ தீவிர ஆலோசனை!!!!

sen reporter
0

காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் முதல் வேலூர் கிரீன் சர்க்கிள் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண காட்பாடி எம்எல்ஏ டாக்டர் சுதாகர், மாநில நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் தனசேகர் ஆகியோர் இன்று தீவிர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கட்டமைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கவும் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மிகவும் சிரமம் அடைவதாக இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் தவிர 24 மணி நேரமும் இந்த வழித்தடத்தில் இயங்குவதாக எம்எல்ஏ புகார் தெரிவித்தார். குறிப்பாக கனரக வாகனங்கள் செல்வதை குறைந்தபட்சம் எவ்வளவு தடை செய்ய முடியுமோ அவ்வளவு தடை செய்ய போக்குவரத்து பிரிவு போலீசாரும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ வலியுறுத்தினார். இதையடுத்து இதுபோன்ற காரணங்களை நடைமுறைப்படுத்த, மாற்று வழித்தடங்களில் கனரக வாகனங்களை திருப்பி விடவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உறுதி அளித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top