இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர். கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கடந்த 15 நாட்களுக்கு முன்பு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் கோரிக்கைமனுஒன்றைஅளித்தனர்.கோரிக்கை மனுவை ஏற்ற ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதன்படி, சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆர். கிருஷ்ணாபுரத்திற்கு அரசுப் பேருந்து மீண்டும் வந்தது. இதனை அப்பகுதி மக்கள் திருவிழாவாக கொண்டாடினர். பேருந்திற்கு மாலை அணிவித்து, வாழைமரம், மாங்கொத்து கட்டி, ஆரத்தி எடுத்து பூசணிக்காய் உடைத்து பேருந்தை சிறப்பாக வரவேற்றனர். பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பேருந்தில் ஏறி ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “பல ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு பேருந்து வசதி இல்லை. இதுகுறித்து நாங்கள் ஆட்சியர் மற்றும் போக்குவரத்துத் துறை மண்டல அதிகாரியிடம் மனு அளித்தோம். தற்போது ஆட்சியர் எங்கள் மனுவை பரீசிலித்து நடவடிக்கை எடுத்ததையடுத்து பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது பள்ளி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஆட்சியருக்கு கிராம மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்." என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.
வேலூர்:குடியாத்தம் பகுதியில் பதிமூன்றுஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குள் வந்த அரசுப் பேருந்து!!!
7/30/2025
0
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஆர். கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக பேருந்துகள் சேவை இருந்து வந்துள்ளது. ஆனால் அதன் பிறகு பேருந்து பற்றாக்குறை காரணமாக இப்பகுதியில் ஓடிய அரசுப் பேருந்தின் சேவையை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதனால் பள்ளி, கல்லுரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் கூலி தொழிலாளர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் என அனைவரும கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
