குமரி மாவட்டம் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் தலைமை வகித்தார். முன்னதாக மகளிரணி சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் பச்சைமால் வந்திருந்தார்.மேடையில் அவருக்கு இடம் வழங்காததால் அருகில் உள்ள டீக்கடையில் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று சென்றார். முன்னாள் அமைச்சர் பச்சைமால் டீக்கடையில் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது பரப்பரப்பை ஏற்படுத்தியது..