தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிராமசாவடி அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள மரத்தின் கிளைகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.அதிலும் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பாமர ஏழை பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.
இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள மரத்தின் கிளைகளால் பொதுமக்கள் உயிர்பழிஅச்சதுடன் வந்து செல்கின்றனர். தொடர்ந்து மரத்தின் கிளைகளானது அலுவலகத்தின் பெயரையே மறைத்து கிராம நிர்வாக அலுவலகம் எங்கே? என பொதுமக்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு படர்ந்து காணப்படுகிறது. மேலும்,குறிப்பிட்ட நாட்களாக
.பல மாதங்களாக கிராம நிர்வாக அலுவலகத்தின் பெயரே தெரியாத அளவிற்கு மரத்தின் கிளைகள் படர்ந்து உள்ளது பொதுமக்களை வெறுப்படையை செய்துள்ளது. அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டும் மக்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.