விழுப்புரம்:கோலியனூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் 23 வது நாள் மண்டல பூஜை!!!!

sen reporter
0

விழுப்புரம் தாலுகா ,கோலியனூர் பகுதியில் கி.பி.,6ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பூமி நாயகி நீளா நாயகி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. இதையடுத்து தொடர்ந்து மண்டல பூஜைகள் தினமும் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது 23ஆம் நாளாக மண்டல பூஜை அபிஷேகம் நடந்தது. இதில் பூமி நாயகி நீளா நாயகி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த 23 வது நாள் மண்டலாபிஷேகத்தை உபயதாரராக இருந்து நடத்தியவர்கள் கோலியனூர் நெடுந் தெருவைச் சேர்ந்த R. கலிவரதன், K . பிரபாகரன், K. வெங்கடேசன் குடும்பத்தினர் ஆவர். இந்த மண்டல அபிஷேக பூஜையை மன்னார்குடி அர்ச்சகர் ஸ்ரீ ராஜகோபால் விமரிசையாக செய்திருந்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top