திருவண்ணாமலை: வந்தவாசி தொகுதிக்கு தி.மு.க.,வில் போட்டியிட முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மோ.ரவி விருப்ப மனு தாக்கல்!!!

sen reporter
0

வந்தவாசி  தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக ( இரண்டு முறை சட்டசபை தேர்தலில்தி.மு.க., வெற்றி பெற்று தங்களது கோட்டையாக 'அங்கம்' வகித்து வருகிறது. இந்த முறையும் வந்தவாசி  தனித்  தொகுதியை அ.தி.மு.க.,வில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விட்டால் 3வது முறையாக வந்தவாசி ( தனித் தொகுதி மீண்டும் தி.மு.க., வசம் சென்றுவிடும் என்ற சூழல் நிலவி உள்ளது.அ.தி.மு.க., தனது கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்காவிட்டால் தி.மு.க., - அ.தி.மு.க., நேரடி போட்டி என முடிவானால், என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத தருவாயில் உள்ளது வந்தவாசி சட்டசபைத் தொகுதி. இந்நிலையில் வந்தவாசி அடுத்த மேல்நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் மோ.ரவி ( 57 ). இவர் தி.மு.க.,வின் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இதுதவிர மோ.ரவி அனக்காவூர் முன்னாள் ஒன்றியக் குழு பெருந்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தி.மு.க.,வில் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தேசூர், பெரணமல்லூர், தெள்ளார் ஆகிய ஊர் மக்களிடம் நெருக்கமாக இருந்து வருகிறார். வந்தவாசி தொகுதியில் அதிகம் வசித்து வரும் முஸ்லிம் மக்களிடமும் இவருக்கு செல்வாக்கு இருந்து வருகிறது. இவர் சொல்வதை மேற்கண்ட மக்கள் கேட்டு தேர்தல் பணியாற்றுவார்கள் என, பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவர், தனக்கு வந்தவாசி சட்டசபை தொகுதியில் போட்டியிட 'டிக்கெட்' கேட்டு சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top