தேனி மாவட்டம் : அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சாக்கடை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!!

sen reporter
0


 உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியின் அவலத்தால் பொதுமக்கள்  தினம்தோறும் புலம்புகின்றனர்.

அனுமந்தன்பட்டியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீரானது செல்வதால் பொதுமக்கள் சாக்கடை நீரினை மிதித்துவிட்டு வீட்டிற்குள் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், சாக்கடை நீரினால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி அனுமந்தன்பட்டி மக்கள் நோய்த்தொற்று பயத்துடன் உள்ளனர்.இதுகுறித்து இப்பகுதி கவுன்சிலர்களும் கண்டுகொள்வது இல்லை, பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். தற்போது டெங்கு, போன்ற கொடியவகை நோய் பரவிவரும் சூழ்நிலையில் சாக்கடை நீரினால் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமோ என மக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையான சாக்கடை நீரை அகற்ற அனுமந்தன்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை இப்பகுதியில் எழுந்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top