திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு தோட்டத்து பாளையத்தில் பல மாதங்களாக வருடக் கணக்கில் சாக்கடை கழிவு நீர் ரோட்டில் குளம் போல் தேங்கியுள்ளது இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவிற்கு கழிவுநீர் தேங்கியுள்ளது.

அந்தப் பகுதியில் பள்ளிகளுக்கு நடந்து செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் தவித்து வருகின்றார்கள் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை தெரிவிக்கின்றார்கள்.