கோவை:ரோட்டரி கிளப் சேவை திட்டங்களுக்கு என மார்ட்டின் பவுண்டேஷன் மூன்று கோடி ரூபாய் நிதியை வழங்கல்!!!
7/07/2025
0
சமூகம்சார்ந்தநலப்பணிகளில்தொடர்ந்து செயல்பட்டு வரும் , ரோட்டரி 3206 மாவட்டம் புதிய ஆளுனராக தேர்வு செல்லா ராகவேந்திரன் பதவி ஏற்பு விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்.அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பல்வேறு ரோட்டரி கிளப் கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு புதிய கவர்னருக்கு வாழ்த்துக்களைதெரிவித்தனர்.இந்நிலையில் நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் ரொட்டேரியன் ஏ.கே.எஸ்.டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டு புதிய கவர்னருக்கு வாழ்த்துக்களைதெரிவித்தார்.தொடர்ந்து ரோட்டரி கிளப் ஆக்ருதி 1.5 கோடி ரூபாயும், மற்றும் ரோட்டரி கிளப் ஆலம் 1.5 கோடி ரூபாய் என மார்டின் பவுண்டேஷன் பங்களிப்பு நிதியாக ரூபாய்3கோடிரூபாயைவழங்கினார். இதுகுறித்துஅவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மார்டின் பவுண்டேஷன் தொடர்ந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், ரோட்டரி சமூக நல பணிகளுக்கு இது வரை மார்டின் பவுண்டேஷன் சுமார் பத்து கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளதாக குறிப்பட்ட அவர், அண்மையில் நாகலாந்து மாநிலத்திற்கு சி.எம்.நிதியாக ரூபாய் நாற்பது இலட்சம்வழங்கியதாகதெரிவித்தார். இந்த சந்திப்பின் போது ரோட்டரி கிளப் ஆக்ருதிதலைவர்மதுகண்ணன், 'செயலாளர் வித்யா லட்சுமணன் ஆலம் தலைவர் தைனஸ் அமுதா,பொருளாளர் ரொட்டேரியன் ஏர்னெஸ்ட் ராபின்,கம்யூனிட்டி தலைவர் பார்வதி ரவிச்சந்திரன்,துணை செயலாளர் லெனின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்…
