தூத்துக்குடி:ஜெர்மனியில் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வீரருக்கு உற்சாக வரவேற்பு!!!!
8/05/2025
0
ஜெர்மனியில் நடைபெற்ற அகில உலக பல்கலை அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியில் நடைபெற்ற அகில உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையான கூடைப்பந்து போட்டியில் இந்திய அணியில் தூத்துக்குடியை சேர்ந்த செல்வன் சுகந்தன் பங்கு பெற்று விளையாடினார். அவரது தந்தை பால கிருஷ்ணன், தூத்துக்குடி துறைமுகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நாடு திரும்பிய செல்வன் சுகந்தனை துறைமுக ஆணையத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துறைமுக சபை தலைவர் சுஷாந்த் குமார் புரோகித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தர்ராஜன்ஆகியோர்பொன்னாடைஅணிவித்துகௌரவித்தனர். அவருடைய விளையாட்டு சாதனைகளுக்கு துறைமுக அதிகார ஆணையம் என்றென்றும் துணை நிற்கும் மற்றும் துறைமுக ஆணைய குழு சார்பாக அனைத்து உதவிகளையும் செய்து தரப்படும் என்று உறுதிப்பட தெரிவிக்கப்பட்டது.