கோவை தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களின் அலட்சியம் ஆபத்தில் பயனிக்கும் குழந்தைகள்!!!
12/10/2024
0
கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது வேலம்மாள் தனியார் பள்ளி.மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்களை அவரவர் வீட்டில் சேர்க்க வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் அதி வேகத்தில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் தப்பான பாதையில் வாகனத்தை இயக்கியதால்.பின்னே சென்ற வாகனங்கள் ஒலி எழுப்பின இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஓட்டுநர் வாகனத்தை விட்டு இறங்கி பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் பேசினார்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறான ஓட்டுநர்களாலும் கண்டு கொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தான் சிறு குழந்தைகள் விபத்திற்கு உள்ளாவதன் காரணம் என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.