இதனால் அதிர்ச்சியடைந்த எம்.பி. சுதா உடனடியாக செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக டெல்லி மாநகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நானும், மாநிலங்களவை உறுப்பினர் சல்மாவும் சாணக்கியபுரி பகுதியில் உள்ள போலந்து தூதரகம் அருகே இன்று காலை நடைபயிற்சி சென்று கொண்டிருந்தோம். அப்போது மர்ம நபர் எனது தங்கச் சங்கிலியை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் செய்வதறியாமல் கத்தி கூச்சலிட்டோம்.அந்த பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீசாரிடம் சம்பவம் தொடர்பாக கூறினோம். அவர்களின் அறிவுறுத்தியதின் பேரில் டெல்லி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளோம். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து என்னால் இன்னும்மீளமுடியவில்லை.டெல்லியின் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் ஒரு பெண் எம்பியிடம் சங்கிலிப் பறிப்பு நடந்துள்ளது. ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், நாட்டின் எந்த பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும்? பெண்கள் தங்களது உடல், உயிர், மானத்தை பாதுகாத்து கொண்டு பயத்துடன் வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி சென்றுள்ள மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதாவின் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!!
8/04/2025
0
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு மாநில எம்பிக்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த நிலையில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா இன்று காலை 6 மணி அளவில் பார்லிமென்ட் விடுதி பகுதியில் உள்ள சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். போலந்து நாட்டின் துணை தூதரகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் எம்.பி சுதா அணிந்திருந்த 4.5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.