ஆண்டுதோறும் வெயில் காலங்களில் ஏரி தூர்வாரப்பட்டு, நீர்சேர்த்து வைக்கப்பட்டு அந்த நீரை விவசாயிகள் 3 போகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இந்த ஆண்டு ஏரியை தூர்வாரத்தால் லேசான மழைக்கே ஏரி நிரம்பி கலங்கள் வழியாக தண்ணீர் வெளியேறி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது, ஏரியில் இருந்து வெளியேறப்படும் நீரில் 500 கனஅடி நீர் நேரடியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்வதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.இது குறித்து பேசிய விவசாயி கந்தசாமி, ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அதிகப்படியாக தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதில் இருந்து வெளியேறும் கழிவுகள் நீரில் கலக்கப்படுகின்றன. இந்நிலையில் விளை நிலங்களுக்கு தேவைகான வளமான தண்ணீரை தரும் ஏரியாக பிள்ளைப்பாக்கம் ஏரி இருந்தது. ஆனால், பருவ மழை தொடங்க உள்ளது தெரிந்தும் ஏன் ஏரியை தூர்வாரவில்லை என தெரியவில்லை. இப்போது பருவ மழையின் நீரை சேமிக்க முடியாமல் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளோம். இப்போது தான் மழை தொடங்கியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் மழை பெய்ய உள்ளது. அதற்குள் ஏரியின் நீர்வரத்து அதிகரித்தால் நிலைமை மோசமாகிவிடும். நினைத்தாலே பயமாக உள்ளது.நீர்வளத் துறையினர் முறையாக இதனை கையாளவில்லை. அரசு ஏரிகளையும், அங்கிருக்கும் மதுகுயையும் முறையாக பராமரிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
காஞ்சிபுரம் நிரம்பி வழியும் பிள்ளைப்பாக்கம் ஏரி செம்பரம்பாக்கத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு!!!
10/25/2025
0
கடந்த3 நாட்களாக பெய்த தொடர் மழையால் பிள்ளைப்பாக்கம் ஏரி அதன் முழு நீர்மட்ட உயரமான 13.5 அடியில் 12 அடியை எட்டியுள்ளது.பிள்ளைப்பாக்கம் ஏரி முறையாக தூர்வாரப்படாததால் மிதமான மழைக்கே நீர் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனைதெரிவித்துவருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் எரி உள்ளது.இந்தஏரிமூலம்பிள்ளைப்பாக்கம், வளத்தாஞ்சேரி, கடுவஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கருக்கு மேல் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது.ஏரி 750 ஏக்கர் பரப்பளவும், நீர்மட்ட உயரம் 13.5 அடியையும் கொண்டது. தற்போது நீர்மட்டம் 12 அடி உயரத்தை எட்டியுள்ளது. ஆகையால், ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு சுமார் 750 கன அடி உபரி நீர் 2 கலங்கள் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
