நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
*வாய் புற்றுநோய்*
கூல் லிப் எனும் புகையிலையானது வாய் புற்றுநோயை ஏற்படுத்தி உயிரையும் கொல்லும் தன்மை வாய்ந்தது இதில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களான நிக்கோர்டின் கார்பன் மோனைக்சைடு பென்சின் ஆசானிக் மற்றும் ஃபார்மலின் போன்ற பல்வேறு பொருட்கள் கலந்துள்ளன இதில் இனிப்பு மற்றும் மின்ட் சுவையுடன் கலந்து போதையை கொடுக்கின்றது மாணவர்கள் தங்களை விட வயதில் மூத்தவர்களுடன் பழகும் போதும் நண்பர்கள் மூலமும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் வாய் புற்றுநோய் ஏற்படும் என்பதை தெரியாமல் பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்
*கடைக்காரர்கள் மீது* *வழக்கு*
நாமக்கல் மாவட்டத்தில் பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் போலீசார் மற்றும் இதர துறைகளுடன் இணைந்து ஆய்வு செய்வதில் கடந்த ஒரு வாரத்தில் 11 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட கூல் லிப் போதை பொருள் கையாக படுத்தப்பட்டு கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பட்டுள்ளது
பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் வளரும் பருவக் குழந்தைகளின் செயல்பாடுகளை கவனித்து அன்புடன் பழகி நேரம் செலவிட வேண்டும் பெற்றோர்கள் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் அரசுடன் பெற்றோர்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மாணவர்களே கூலி போன்ற போதை பொருட்களின் பிடியிலிருந்து வெளியே கொண்டு வரவும் பழக்கத்திற்கு அடிமையாகாமல் பாதுகாக்க முடியும்.
*சட்டப்படி நடவடிக்கை*
பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு கூலி போன்ற போதை பொருட்கள் விற்பது செய்வது தடை செய்யப்பட்டுள்ளது தடையை மீறி கூல் லிப்ஸ் போன்ற போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பொதுமக்களும் தடை செய்யப்பட்ட கூலி போன்ற போதைப்பொருட்கள் கடைகளை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக 1098 மற்றும் 9486111098 என்ற எண்ணங்களுக்கு தகவல் கொடுக்கலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
ந
.jpg)