மத்திய மந்திரியை சந்திப்பதிலும் நம்பிக்கை இல்லை உச்சநீதிமன்றத்தில் வழக்கை விரைவாக விசாரிக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் Dr.அன்புமணி ராமதாஸ் பேட்டி!

sen reporter
0

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ம.க. தலைவர் Dr அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய நீர் வளத்துறை மந்திரியை சந்திக்க உள்ளோம். காவேரியில் இருந்து தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த உள்ளோம். தமிழகத்திற்கு கடந்த 10ந் தேதி வரை 60 டி.எம்.சி. நீரை காவேரி ஒப்பந்தப்படி கர்நாடக தந்து இருக்க வேண்டும். ஆனால் கர்நாடக 6 டி.எம்.சி. தண்ணீரை தான் தந்தது. கர்நாடக காவேரி படுக்கையில் உள்ள பெரிய அணைகளில் கிட்டத்தட்ட 64 டி.எம்.சி. நீர் இருக்கிறது. ஆனால் மேட்டூரில் 15 டி.எம்.சி. நீர் தான் உள்ளது. 5 லட்சத்தி 10 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து உள்ளனர். இதில் 3 லட்சம் ஏக்கர் அறுவடை செய்யப்பட்டு உள்ளது. 2 லட்சம் ஏக்கர் கருகி கொண்டு இருக்கிறது. ஒரு வாரத்தில் தண்ணீர் விடவில்லை என்றால் 2 லட்சம் ஏக்கர் நாசமாகி விடும். உலகத்திற்கே நஷ்டம் ஏற்படும். உணவு பஞ்சம் ஏற்படும். கர்நாடக அரசு பொய் சொல்லி கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம், காவேரி நடுவர் மன்றம், காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி ஒழுங்கு முறை குழு, ஒப்பந்தம் ஆகியவற்றை  மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுகிறது. கர்நாடக தனி நாடு போல் செயல்படுகிறது. இந்தியாவில் இருக்கிறோம் என்ற எண்ணம் கிடையாது போல. கர்நாடக- தமிழ்நாடு நல்ல உறவு இருக்க வேண்டும். இந்த விவகாரம் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையாக மாறபோகிறது. குறுவைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் காவேரியை நம்பி உள்ளது. குடிநீர், வாழ்வாதாரம், விவசாயம் உள்பட அனைத்துக்கும். சென்னையில் வாழும் 1 கோடி மக்களுக்கும் காவேரியை நம்பி உள்ளனர். காவேரியில் இருந்து தண்ணீர் தர மாட்டோம் என்பது வீம்பு. அரசியல் காரணங்களுக்காக செய்கின்றனர். 5 அல்லது 6 மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் வருவதால் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி கொண்டு இருக்கிறார்கள். இப்போவே தண்ணீர் திறந்து விடவில்லை.  மேகதாது அனை கட்டி விட்டால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வர போவதில்லை. இதை எல்லாம் மத்திய மந்திரி விளக்கி கர்நாடக அரசை வலியுறுத்த சொல்லுவோம். கர்நாடக அரசை வலியுறுத்தினாலும் நம்பிக்கை இல்லை. ஆனாலும் போய் பார்ப்பது கடமை. இதற்கு ஒரே வழி உச்சநீதிமன்றம் தான். உச்சநீதிமன்றத்தில் வழக்கை விரைவாக எடுக்க தமிழக அரசு கேட்க வேண்டும். காலம் போய் கொண்டு இருக்கிறது. பயிர்கள் கருகி கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top