தேனி மாவட்டம் சுக்குவாடன்பட்டியில் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் கவுன்சிலர்!!!
10/04/2023
0
தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள சுக்குவாடன்பட்டியில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் எதிரே சாலையின் ஓரத்தில் நாய் ஒன்று இறந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அப்பகுதி கவுன்சிலரான மதுமிதா நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இப்பகுதி குடியிருப்புகள் அதிகமாக நிறைந்த பகுதி என்பதால் குப்பைக்கழிவுகளால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள்வரை நோய்த்தொற்று பயத்துடனேஉள்ளனர். குறிப்பாக இப்பகுதியில் நாய் இறந்து கிடப்பது குறித்தும், 1வது வார்டில் சாலை வசதிகள் அமைத்துதரும்படியும் பொதுமக்கள் பலமுறை கவுன்சிலரான மதுமிதாவிடம் கூறியும் கவுன்சிலரானவர் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். பொதுமக்கள் பல கோரிக்கைகள் கவுன்சிலரிடம் தெரிவித்தும் இந்நாள் வரை பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் இருப்பது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து குப்பைக்கழிவுகளை அகற்றி தரும்படி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி தலைவரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் தலைவரும் கண்டும் காணாமலும் இருப்பதாக பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். பொதுமக்களின் கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் இருப்பது தமிழக அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என கவுன்சிலருக்கு தெரியாதா என பொதுமக்கள் முனுமுனுக்கின்றனர்.தேர்தல் நேரத்தில் வார்டு மக்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்துது காற்றில் பறந்து விட்டதா என பொதுமக்கள் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.இதனை கருதி பொதுமக்களின் கோரிக்கைகளான குப்பைக்கழிவுகளை அகற்றி தரவும், 1வது வார்டில் சாலை வசதிகளை அமைத்து தரவும் தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
