திருவண்ணாமலை புதிதாக போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சிங்காரப்பேட்டை முதல் அத்திப்பாடி செல்லும் வழியில் சாலை அதிக உயரமாக போடப்பட்டுள்ளதால் எதிர் எதிர்வரும் வாகனங்கள் தெரிவதில்லை இதனால் இப்பகுதியில் அடிக்கடி
விபத்து ஏற்படுகிறது கடந்த மாதம் நடந்த விபத்தில் ஒருவர் கால் முறிவு ஏற்பட்டுள்ளார் இச்சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதால் சாலையே சரி செய்து தருமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் கோரிக்கை வைத்தும் இதுவரையில் செவிசாய்க்காத அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விட்டால் சுற்றியுள்ள அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தகவல் கொடுத்துள்ளனர்
