நீலகிரி மாவட்டம் கள்ளிக்கோட்டை-ஊட்டி பேருந்தானது நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி அருகே சென்றுகொண்டிருந்தபோது பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவியை காபி காடு பேருந்து நிறுத்தத்தில் நடத்துனர் இறக்கிவிட மறுப்பு தெரிவித்தார்.மேலும்,மாணவியை இறக்கிவிட மறுப்பு தெரிவித்தது மட்டுமின்றி மாணவியிடம் வாக்குவாதத்திலும் நடத்துனர் ஈடுபட்டார்.இதனை தொடர்ந்து மாணவிக்கு ஆதரவாக
பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நடத்துனரை தட்டி கேட்டனர். தொடர்ந்து பயணிகளிடமும் வாக்குவாதம் செய்ததோடு அசிங்கமான வார்த்தைகளால் நடத்துனரானவர் பயணிகளை திட்டியும் உள்ளார்.மேலும், பயணிகளை பயமுறுத்தும் விதமாக மோசமான வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் உங்களை கொன்றுவிடுவேன் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் அந்த பேருந்து நடத்துனருக்கு எதிராக போற்கொடி தூக்கியுள்ளதை தொடர்ந்து பயணிகளுக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனவும்,அராஜகத்தில் ஈடுபட்ட நடத்துனரை உடனடியாக தமிழக அரசு பணிநீக்கம் செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இந்த நிகழ்வானது தற்போது சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.
.jpg)