தேனி மாவட்ட அலுவலர் தீயணைப்பு செ.வினோத் அவர்களின் உத்தரவுப்படி தகவல் அறியும் உரிமை சட்டம் வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியானது தேனியில்
நடைபெற்றது.உதவி மாவட்ட அலுவலர் குமரேசன் அவர்கள் கொடியசைத்து இந்த பேரணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நாடார் சரஸ்வதி கல்லூரி மாணவிகள், முத்துதேவன்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள்
மற்றும் NSS மாணவர்கள், ஆசிரியர்கள் இவர்களுடன் தேனி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் ஜெ.ஜெயராணி, நிலைய அலுவலர் போக்குவரத்து, கமாண்டோ வீரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பதாகைகள் ஏந்தி தேனி நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் இந்த நிகழ்வானது தேனி தீயணைப்பு நிலையத்தில் துவங்கி கணபதி சில்க்ஸ் வரை நடைபெற்றது.


