மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை வெளியேற்ற எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை பார்வையிட்ட தமிழக முதல்வர்!!!
11/30/2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா, துணை மேயர் திரு. மு. மகேஷ்குமார், வருவாய் நிர்வாக ஆணையர்/கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ். கே. பிரபாகர்,இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப., நகராட்சி ஆணையர் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குனர் திரு. எஸ்.ஏ.ராமன்,இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
