அப்போது, மகேஸ்வரியின் உடல் கிடந்த பகுதியில் சட்டை பட்டன் ஒன்று இருந்துள்ளது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அது அவரது இரண்டாவது மகனின் சட்டை பட்டன் என்பது தெரியவந்தது. பின்னர், சிறுவனிடம் விசாரித்ததில் அவர்தான் தனது தாயை கொன்றதாக பகீர் வாக்குமூலம் அளித்தார்.சிறுவன் அளித்த வாக்குமூலத்தில், 'எனக்கு படிப்பில் பெரிய அளவில் நாட்டம் கிடையாது ஆனால், தினமும் பள்ளிக்கூடத்திற்கு சென்று விடுவேன். வீட்டிற்கு வந்த பிறகு படிக்க மாட்டேன். மாறாக, எனது நண்பர்களுடன் விளையாடுவது, ஊர் சுற்றுவது என இருப்பேன். மேலும் நான் டிவி பார்ப்பது எனது தாய்க்கு பிடிக்கவில்லை. தொடர்ந்து என்னை கண்டித்து வந்ததால், அவர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.இந்நிலையில், தீபாவளி தினமான கடந்த 20ஆம் தேதி மதியம் எனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அந்த கோபத்தில் அம்மா என்னை அடித்தார். மேலும், படிக்காமல் ஏன் ஊர் சுற்றுகிறாய்? எனவும் கண்டித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து நானும் சென்றேன். அங்கு வைத்து எனது தாயிடம், ஏன் அடிக்கடி என்னை கண்டிக்கிறாய்? என கேட்டேன். அதற்கு அவர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதனால் கோபமடைந்த நான், அவரை தள்ளிவிட்டு கழுத்தை காலால் மிதித்தேன். அப்படியும் அவர் உயிர் போகாதால், அவர் அணிந்திருந்த தாலி கயிற்றைக்கொண்டு கழுத்தை இறுக்கினேன். இதனால் சில நொடிகளில் அவர் உயிரிழந்து விட்டார். பின்னர், நான் எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு வந்து விட்டேன். வெகு நேரம் ஆகியும் தாய் வரவில்லை என எனது தந்தை மற்றும் உறவினர்கள் அவரை தேடினர். நானும் அவர்களுடன் சேர்ந்து தேடுவது போல நடித்து நாடகம் ஆடினேன். ஆனால், போலீஸ் விசாரணையில் மாட்டிக்கொண்டேன்'' என அந்த சிறுவன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், அவரை உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கருதி, படிக்காமல் ஊர் சுற்றுவதை கண்டித்த தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
