சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட 194வது வார்டு பகுதிகளில் துரித நடவடிக்கை எடுக்கும் மாமன்ற உறுப்பினர் விமலா கர்ணா!!!
சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 194வது வார்டில் நேற்று இரவு பெய்த பெருமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
குறிப்பாக 194வது வார்டு அனுமன் காலனி, ராஜன் நகர், செல்வா நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.
பதற்றமடைந்த பொதுமக்கள் பாதிப்பு குறித்து தொலைபேசி மூலம் மாமன்ற உறுப்பினர் விமலா கர்ணா அவர்களிடம் புகார் அளித்தனர்.
தகவலை தொடர்ந்து விமலா கர்ணா உடனடியாக அதிகாரிகளுடன் நேரில் சென்று முழங்கால் தண்ணீரில் இறங்கி அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ராட்சத மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றி நடவடிக்கை எடுத்தார்.
பாதுகாப்பு நடவடிக்கையின் போது 194வது வட்ட திமுக செயலாளர் குங்ஃபூமாஸ்டர் எஸ். கர்ணா, இவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
பொதுமக்களின் தகவலை தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுத்த விமலா கர்ணா அவர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்
