சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 15ற்கு உள்ளடக்கிய வார்டு193 துரைப்பாக்கம் பகுதியில் MRL அறக்கட்டளை சார்பாக நிறுவனத் தலைவர் MRL விஜயகுமார் ஏற்பாட்டில்,
மிக்ஜாம்புயல், மற்றும் கன மழையினால் பாதிக்கப்பட்ட 5000 குடும்பங்களுக்கு அரிசி , பெட்சீட் போன்ற நிவாரண பொருட்களும்,1200 மாணவ மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் உள்ளிட்ட வைகளை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டு வழங்கினார்.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் வட்ட கழக செயலாளர் ஏ.கே. ஆனந்த், மாவட்ட பிரதிநிதி தேவராஜ் , அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள்
மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்