அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்தும் வகையில் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் டி.சிந்தலைசேரியில் அன்னை மரியா முதியோர் இல்லத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்வில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
