கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலையடுத்த
பட்டசாகின்விலை பகுதியை சேர்ந்தவர் மோகன் இவர் கூலித்தொழில் செய்து வருகிறார்.
திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று தன் குழந்தைகளுடன் வீட்டின் அருகாமையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு இரவு ஒரு மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
தன் அறையில் தூங்குவதற்காக சென்று விட்டார். இன்று காலை அவரது மனைவி சரஸ்வதி அவரின் அறையை திறந்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியான சரஸ்வதி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
