தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நிறைமாத கர்ப்பிணிப் பெண் அனுசுயாமயில் மீட்கப்பட்டார்.
தனக்கும், தன் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து வந்துவிடும், இனி நாம் உயிர் பிழைக்க வழியே இல்லை என்று அச்சத்துடன் வெள்ளத்தில் சிக்கி இருந்த இந்த பெண்ணை மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனுப்பிய ராணுவ ஹெலிகாப்டர் பத்திரமாக மீட்டெடுத்தது.
அதற்கான முழு முன்னெடுப்புகளையும் நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் செய்தார்.
நேற்று இந்தப் பெண்ணுக்கு மதுரை இராஜாஜிஅரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
அந்த அழகான ஆண் குழந்தைக்கு தாயான அந்தப் பெண்மணி பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தன் குழந்தைக்கு நரேந்திரன் என்று பெயர் வைத்துள்ளார்.