தென்காசி மாவட்டம்: குற்றாலத்தில் மாயமான17 வயது சிறுவன் உயிரிழப்பு!
May 18, 2024
0
பழைய குற்றால அருவியில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். அப்போது, வெள்ளத்தில் திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தீயணைப்புத்துறையினர், போலீசார் தேடிய நிலையில் அஷ்வின் உடல் மீட்கப்பட்டது.