தேனி மாவட்டம் உத்தமபாளையம் சந்தை திடலில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
உத்தமபாளையம் அருகே புதூரில் மாட்டுத்தீவன வைக்கப்படப்பை தீ வைத்து கொளுத்திய சமூக விரோதிகளை கைது செய்யக்கோரியும்,தீ வைக்கப்பட்டதில் மாட்டுத்தீவன சொத்துக்களை இழந்த விவசாயிகளான முத்து மற்றும் முரளி ஆகியோருக்கு இழப்பீடு வழங்ககோரியும், பல்லவராயன்பட்டியில் ஹரிச்சந்திரன் சாவில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், உத்தமபாளையம் தாலுகாவிற்குட்பட்ட, சுக்காங்கல்பட்டியில் அருந்ததிய இளைஞர் விஷ்னு மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கிரி மற்றும் விஜயலட்சுமி உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் இடக்கோரியும், அய்யம்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகிகள் மீது ரவுடி முத்திரை குத்தாதே என்றும்,பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் மீதான மோசடி பத்திரப்பதிவை ரத்துசெய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.