தமிழக முதலமைச்சர் பார்வைக்கு!!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் பொதுமக்களை யானைகள் நீண்ட நாட்களாக அச்சுறுத்தி வரும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்தவாரு தினம்தோறும் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். மேலும்,இதுசம்பந்தமாக மக்கள் பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் யானையை பிடிக்க சொல்லி கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக யானையை பிடிக்க இரண்டு கும்கி யானைகளை
வனத்துறையினர் இறக்கி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.இன்று அதிகாலை மக்கம் மூலா பகுதியில் மாவட்ட வனத்துறை அலுவலகம் அருகே யானை சுற்றி திரிந்துள்ளதை பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.யானை சுற்றி திரிந்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.மேலும், அப்பகுதியில் தொடர்கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் யானை பயத்தால் வீட்டைவிட்டு வெளியை செல்லாமல் உள்ளனர். வனத்துறையினரும் அச்சுறுத்தி வரும் யானையை பிடிக்க இரண்டு கும்கி யானைகளுடன் முகாமிட்டும் இதுவரை பிடிக்கமுடியாமல் திணறி வருகின்றனர். இதனை கருதி தமிழக முதலமைச்சர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் யானையை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஒற்றை கோரிக்கை வைத்துள்ளனர்.