வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் தலைமை வகித்தார். இந்த குறைதீர் கூட்டத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணனிடம் பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். குறிப்பாக அந்தந்த மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி அந்த காவல் நிலைய ஆய்வாளரை தொலைபேசியில் அழைத்து இந்த புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்குண்டான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் ஏடிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.