மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை பல்லவன் இல்லத்தில் தாழ்தளப்
பேருந்துகள் உள்ளிட்ட 100 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், இந்துசமய
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.