சின்னமனூர் தேரடி தெருவில் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேலும், மணல், சல்லிகற்கள் போன்றவற்றை அப்பகுதியில் குவித்து வைப்பதாலும் அடிக்கடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
குறிப்பாக இப்பகுதியில் அவசரஊர்திகள் வந்து செல்ல முடியாமல் மக்கள் அவதியடைகின்றனர்.
சாலையின் இருபுறமும் இப்படிப்பட்ட இடையூறுகளால் பள்ளி வாகனங்கள் குறிப்பிட்ட நேரங்களில் பள்ளி சென்றடைவதற்கு முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேரடி தெரு சீராகுமா?
நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் பார்வையிடுவார்களா?
