தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி 14வது வார்டில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது.
புதிதாக கட்டப்பட்டதிலும் தொடர்ந்து சாக்கடை நீரானது தேங்கி நிற்கும் அவல நிலையே தொடர்கிறது.
கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். மதுபிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்களை சாக்கடையில் விட்டு செல்லும் தொடர் நிகழ்வும் காணப்படுகிறது.
இதற்கிடையே டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்களும் பரவிவிடும் எனும் சூழலில் பொதுமக்கள் பயத்துடன் உள்ளனர்.இதனை கருதி கூடலூர் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.jpg)