.எஸ். சேவைகள், திண்ணை பிரசாரம்.
புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர், சமத்துவத் தலைவர், மக்கள் நேசர் டாக்டர் திரு A.C. சண்முகம் அவர்களின் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு முகாம்கள், மக்களுக்கு தொடர் உதவிகள் குறித்த சேவைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஏ.சி.எஸ். சேவைகள் திண்ணை பிரசாரம் புதிய நீதிக் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தொடங்கப்பட்டது.
குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமத்தில் ஊர் மக்களிடம், தைத்திருநாள் முன்னிட்டு தொடங்கியது.
புதிய நீதிக் கட்சி நிறுவனத் தலைவர், சமத்துவத் தலைவர், மக்கள் நேசர் டாக்டர் திரு A.C. சண்முகம் அவர்களின் தொடர் மருத்துவச் சேவை என ஆறு மாதங்களில், மருத்துவர்களைத் தேடி மக்கள் அல்ல- மக்களைத் தேடி மருத்துவர்கள்' திட்டத்தின்படி 104 மருத்துவ முகாம்கள் மற்றும் கல்விச் சேவை, குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் ஜனவாரி 20ம் தேதி ஏ.சி.எஸ். வேலைவாய்ப்பு முகாம், மக்களுக்கான தொடர் நல உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து நகரங்கள் , கிராமங்களில் இந்த பிரசாரம் தொடரும். பிரசார தொடக்க நிகழ்வில் புதிய நீதிக்கட்சி மாவட்ட தொழில்நுட்ப செயலாளர் தி.பிரவீன்குமார், அம்பேத்கர் பேரவை தலைவர் நத்தம் ஆர். நாகராஜ், அம்பேத்கர் பேரவை இளைஞர் அணி செயலாளர் பிரசாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
