தூத்துக்குடி மாவட்டம் : செந்தூர் பக்தர்களுக்கு எச்சரிக்கை!
May 18, 2024
0
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயில் கடற்கரையில் அதிகளவில் கண்ணாடி போன்ற ஜெல்லி மீன்கள் கரை பகுதியில் ஒதுங்குகின்றன. இதனால் பக்தர்களுக்கு தோல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.