தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை!
May 16, 2024
0
தூத்துக்குடி மாவட்டத்தில் மே18 ம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதி மற்றும் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதோடு ஆற்றில் குளிக்க கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.