கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று SRJ காவலர் நல திருமண மண்டபத்தில்
இரத்ததான முகாமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் IPS தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், உயிர் காக்கும் வாய்ப்பு எல்லாம் அனைவருக்கும் எளிதாக கிடைப்பதில்லை. அதனால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். உறுப்பு தானங்கள் இறந்த பிறகு தான் கொடுக்க முடியும். ஆனால் நாம் உயிரோடு இருக்கும் போதே கொடுப்பது இரத்ததானம் மட்டுமே என பேசினார். நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி. சௌமியா, மாவட்ட குருதி பரிமாற்ற குழு அலுவலர் டாக்டர். திரு. குமார் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர்.