இராமநாதபுரம் மாவட்டம் : தனுஷ்கோடிக்கு செல்ல தடை!
May 23, 2024
0
இராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு சென்று கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்து மகிழ்வது வழக்கம்.ஆனால் தற்போது காற்றழுத்தம் காரணமாக தனுஷ்கோடி கடற்கரையில் வழக்கத்தைவிட அதிகமாக காற்று வீசுகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.