கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் குப்பை கழிவுகள் சேகரிக்கும் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்தாமல் பயன்படுத்தி வந்த நிலையில் கடும் வெய்யிலின் தாக்கத்தின் போது பிளாஸ்டிக் கழிவுகளில் ஏற்பட்ட உச்சகட்ட வெப்ப சலனத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.