திமுக மாவட்ட, மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கூட்டம் தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர் - துணைஅமைப்பாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை காணொலிக்காட்சிவாயிலாக(ZoomMeeting) கலையரங்கில்”, கழக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன்,எம்.எல்.ஏ., தலைமையில், இணைச் செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன்,யதுணைச் செயலாளர்கள் மன்னை த. சோழராஜன், சேலம் ரா. தமிழரசன்,னகா.அமுதரசன்,பி.எம்.ஆனந்த்கா.பொன்ராஜ்,வி.ஜி.கோகுல்,திருமதி ஜெ. வீரமணி ஆகியோர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்அனைத்துமாவட்ட,மாநில மாணவர்அணிஅமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம் - 1"நவீன தமிழ்நாட்டின் சிற்பி”முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழினை,இளைய சமுதாயமே கொண்டாடி போற்றுவோம்! தமிழின உரிமைகள் - தமிழ்நாட்டின் உயர்வு - திராவிடச் சிந்தனை -சுயமரியாதை - மாநில சுயாட்சி - சகோதரத்துவம்மதச்சார்பின்மை -சாதி ஒழிப்பு - ஒடுக்கப்பட்டோர் நலன் - சமூகநீதி - பெண்ணுரிமைபஇலக்கிய வளர்ச்சிகலைத்துறை'மேம்பாடு - எனப் பலமுனைப் பங்களிப்புகளை வழங்கி நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் - நமக்குய உயிரானவர்-
திராவிடத்தின் கருவானவர் நமக்குத் திருவானவர்
இன்றும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர்
அவர்களுக்கு வரும் சூன் 3 ஆம் நாள் நூற்றாண்டு நிறைவு விழா
நடைபெற உள்ளது. எந்த நோக்கத்துக்காக தனது வாழ்க்கையையே தலைவர்
கலைஞர் அவர்கள் ஒப்படைத்துக் கொண்டார்களோ அந்த நோக்கத்துக்காக
தலைவர் கலைஞர் அவர்களின் வழித்தடத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் வார்ப்பாக மட்டுமல்லாமல், முத்தமிழறிஞராகவே செயல்பட்டு வரும் கழகத்
தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்
வழிகாட்டுதலோடு அயராது பணியாற்ற இக்கூட்டம் உறுதி ஏற்று,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை
முன்னிட்டு, கழக மாணவர் அணி சார்பில் கழக இரு வண்ண கொடியேற்றி,
எளியோர்களுக்குப் பசியாற்றும் முகாம்கள், வேட்டி, சேலை வழங்குதல்,
மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள், கல்வி உதவித் தொகை
வழங்குதல், மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் பயின்று, 10 மற்றும் 12-
ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்
தொகை மற்றும் பரிசு வழங்குதல், விளையாட்டுப் போட்டிகள்,
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துதல், விளையாட்டுத்
துறையில் சாதிக்க நினைக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துதல்,
அரசியல் அறிவுத் தேடலுக்கான கருத்தரங்குகள், கவியரங்கம்,
பட்டிமன்றங்கள் நடத்துதல், மருத்துவ முகாம்களை நடத்துதல், இரத்த தான
முகாம்களை நடத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர
வாகனங்கள் வழங்குதல் போன்ற பணிகளை கழக மாணவர் அணியின்
மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் தங்கள் பகுதியில்
தொண்டர்களின் இல்ல விழாவாக மக்கள் விழாவாக கொள்கை
விழாவாக வெற்றி விழாவாக இந்தியத் திருநாடே திரும்பிப் பார்க்கும்
வகையில் மிகச் சிறப்பாக நடத்திட வேண்டும் என்று இக்கூட்டத்தில்
பெருமகிழ்ச்சியுடன் தீர்மானிக்கப்படுகிறது.தீர்மானம்2 முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு – எக்ஸ்-சமூக
வலைதளத்தில் மாணவர் அணியின் தொடர் சொற்பொழிவு நிகழ்வு!உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பல்லாயிரம் ஆண்டுப்
பழந்தமிழின் முத்தமிழ் அறிஞர் - பெரியாரின் சலியாத உழைப்பும், பேரறிஞர்
அண்ணா அவர்களின் பரந்த உள்ளமும் தன்னகத்தே கொண்டிருந்தவர்
இந்திய நிலப்பரப்பில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த சிற்பி - முத்தமிழறிஞர்
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, முத்தமிழறிஞர் கலைஞர்
அவர்களின் சமூகநீதி பார்வை, சமத்துவக் கொள்கை, லட்சியம், சிறப்புகள், ஆட்சி
நிர்வாகத் தன்மை, புரட்சிகரமான திட்டங்கள், உருவாக்கிய கட்டமைப்புகள் போன்ற
தலைப்புகளில், வரும் ஜீன் மாதத்தில் தினமும் இரவு 07.00 மணிக்கு,
இரண்டு/மூன்று நபர்கள் வீதம் கழக மாணவர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள்
உரையாற்றும் வகையில், கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள்
சிறப்புரையுடன் எக்ஸ்-சமூக வலைதளத்தின் “ஸ்பேஸ்” நிகழ்ச்சியில் உரையாற்ற
இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் - 3
“மாணவ நேசன் – முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சும் எழுத்தும்”
எனும் தலைப்பில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள்!தமிழே உயிராக, தமிழினமே உணர்வாக, தமிழர் நலனும்
தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே வாழ்நாள் செயல் திட்டமாகக் கொண்ட
ஓய்வில்லாச் சூரியன்; தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால
பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்; ஒரு நூற்றாண்டுகால திராவிட இயக்க
வரலாற்றில் முக்கால் நூற்றாண்டுகாலப் பங்களிப்பாளர்; அரை நூற்றாண்டு
காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து
தமிழ்நாட்டுஅரசியலின் அச்சாணியாகச் செயல்பட்டவர்; களம் கண்ட 13
தேர்தல்களிலும் வெற்றி கண்ட சாதனையாளர்; ஐந்து முறை தமிழ்நாட்டின்
முதலமைச்சராகப் பொறுப் பேற்று மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும்
திரைப்படம் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும்
நலன் விளைவிக்கும் திட்டங்களை வழங்கியவர்; இந்திய ஜனநாயகக்
காவலராகத் திகழ்ந்த மூத்த அரசியல் தலைவர்; இலக்கியம் கவிதை
இதழியல் - நாடகம்
வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர்; திருக்கு
வளையில் பிறந்து திருவாரூரில் வளர்ந்து உலகெங்கும் வாழும்
தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் 'தமிழினத் தலைவர்' கலைஞர்
அவர்களின் நூற்றாண்டு விழாவின் தொடக்கத்தில் "மாணவ நேசன்
முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சும் எழுத்தும்” எனும் தலைப்பில் பேச்சு
மற்றம் கட்டுரைப் போட்டிகளை நடத்துவதற்கு கழக மாணவர் அணிக்கு
கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
ஆணையிட்டார்கள். அதனடிப்படையில், அனைத்து கழக மாவட்டங்களிலும்
மாவட்ட அளவில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது.
நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளின் காரணமாக வரும் ஜீன்
மாதத்தில் மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளை
நடத்துவதெனவும், மேலும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு முன்னிட்டு பள்ளி,
கல்லூரிகளில் “மாணவ நேசன் முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சும்
எழுத்தும்” எனும் தலைப்பில் பேச்சு மற்றம் கட்டுரைப் போட்டிகளை
நடத்துவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் - 4
தமிழ்நாடு, புதுவை முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில்
“தமிழ் மாணவர் மன்றம்” ஏற்படுத்தி புதிய உறுப்பினர்களை
சேர்த்திடுவீர் கல்லூரிகளில் பயிலும் திராவிடச் சிந்தனை கொண்ட மாணவர்களை
ஒன்றினைத்து, அரசியல் சார்பற்று கல்லூரி மாணவர்களின் தேவைகளை,
பிரச்சனைகளையும் பூர்த்தி செய்யும் வண்ணம் செயல்படவும், தமிழ் மொழி,
தமிழர் பண்பாடு, தமிழர் கலை உணர்வு, தமிழின தொன்மையும்,சுயமரியாதை சமூகநீதி
பெருமைகளையும் இளைய தலைமுறையினர் அறியும் வண்ணம் செயல்படவும்,
பகுத்தறிவு
சமத்துவம் ஆகிய
கொள்கைகளை கருத்தியல் பரப்புரை செய்திடவும், மேலும் மாணவர்களிடம்
திறன் மேம்பாட்டினை உருவாக்க பயிற்சிகளும், ஊக்குவிக்கும் வகையில்
போட்டிகளையும் நடத்திடும் வகையில் செயல்படும் தமிழ் மாணவர் மன்றத்தை
உருவாக்கிடும் பொன்னான வாய்ப்பினை நமது கழகத் தலைவர்-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமக்கு அளித்ததன்
அடிப்படையில், கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர்
இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களால்
அமைப்பின் கொடி மற்றும் இலச்சினை வெளியிடப்பட்டு, சென்னை, திருச்சி,
திருப்பூரில் உள்ள கல்லூரிகளில் தமிழ் மாணவர் மன்றம் உருவாக்கப்பட்டு
வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.வரும் கல்வியாண்டில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள அனைத்து
கல்வி நிலையங்களான கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பாலிடெக்னிக்
மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளிகள், கல்லூரி விடுதிகளில் “தமிழ் மாணவர்
மன்றம்” அமைப்பை உருவாக்கி, புதிய உறுப்பினர்களை சேர்த்து,
இவ்கல்வியாண்டிற்கான (2024–2025) நிர்வாகிகளை நியமிக்கும் பணியினை
விரைவாக துவக்கிட கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநில
அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் - 5
2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் சூறாவளியாய் சுழன்றடித்த
வெற்றி நாயகன் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களுக்கும் மற்றும் கழக இளந்தலைவர்-மாண்புமிகு உதயநிதி
ஸ்டாலின் அவர்களுக்கும் மாணவர் அணியின் நன்றிகள்”தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில்
மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம்
வலியுறுத்துகிற கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை
வீழ்த்திடவும் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நமது
கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
எதிர்கொண்ட எதிரிகள் யார்? இந்திய ஜனநாயகத்தின் எதிரிகள், இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தின் எதிரிகள், இந்தியாவின் ஒற்றுமைக்கும்
ஒருமைப்பாட்டுக்கும் எதிரிகள், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்
மதச்சார்பின்மைக் கொள்கைக்கும் எதிரிகள், கூட்டாட்சிக் கருத்தியலுக்கு
எதிரிகள், சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் இந்தியாவின் எதிரிகள்,
மொத்தமாகச் சொல்வதென்றால் மனித குலத்தின் எதிரிகள். பொய் சொல்ல அஞ்சாதது மட்டுமல்ல, பொய்களை மட்டுமே சொல்வது
என்பதைக் குறிக்கோளாகவே கொண்டிருக்கும் பாசிச பா.ஜ.க.வினர்!இந்த எதிரிகளை வீழ்த்த நமது கழகத் தலைவர்-மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த 22.03.2024 முதல் 17.04.2024
வரை 26 நாட்கள், தமிழ்நாடு முழுவதும் 6,100 கிலோ மீட்டர் பயணம் செய்து,
20 பொதுக் கூட்டங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்களை நேரடியாக
சந்தித்து பிரச்சாரம் செய்துள்ளார். அவர் செய்த பிரச்சாரமானது
பொதுமக்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இது நடைபெற்ற
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத்
தேடித் தரும்!“தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்" என்ற பழமொழிக்கேற்ப,
கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் இளந்தலைவர்
திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
செல்லாத ஊர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று கடந்த 22.03.2024
முதல் 17.04.2024 வரை 25 நாட்களில், தமிழ்நாடு முழுவதும் 39நாடாளுமன்றத் தொகுதிகளில் 8,885 கிலோ மீட்டர் பயணம் செய்து, 1.24
கோடி பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து 122 பிரச்சார முனைகளில் 3,726
நிமிடங்கள் பேசியுள்ளார். அவரது பேச்சு எளிமையான தமிழில்
அமைந்திருந்தது. அடுக்கு மொழிகள் இல்லை. ஆனால் அர்த்தம்
செறிந்ததாக இருந்தது. மேம்போக்கான பேச்சாக இல்லை. ஆழமான.சிந்தனையைத் தருவதாக அமைந்திருந்தது. அதனால் பொதுமக்கள்
அனைவரும் வெகுவாக ரசித்தனர். அவரது பேச்சானாது பொதுமக்களிடம்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்
வெற்றி வருங்காலத்தில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வோர்க்கு ஒரு சிறந்த வழிகாட்டும் மாடலாகத் திகழும்! என்பதில் ஐயமில்லை.கழகத்
தலைவர்-மாண்புமிகு
தமிழ்நாடு
முதலமைச்சர்
அவர்களுக்கும், கழக இளைஞர் அணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர்
இளந்தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் கழக மாணவர்
அணியின் இக்கூட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.இரங்கல் தீர்மானங்கள்:
1விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற
உறுப்பினருமான திரு. நா. புகழேந்தி அவர்கள், உடல் நலக்குறைவால்
இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறோம்.
மாணவர் அணியின் துணைச்
2) கழக
செயலாளர்
திரு. அதலை பி. செந்தில்குமார் அவர்களின் தந்தையார் திரு. எம்.பிச்சை
சேர்வை அவர்கள், உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்பதை
மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறோம்.
3) கழகத்
தலைவர்-மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் தனிச் செயலர் திரு. ஆர். தினேஷ்குமார் அவர்களின்
தந்தையார் திரு. டி.வி. ரவி அவர்கள், உடல் நலக்குறைவால் இயற்கைஎய்தினார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்யப்பட்டது.