கோவை நீட் தேர்வால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சேர்க்கை குறைந்து உள்ளதாக - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே.ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

sen reporter
0



நீட் தேர்வால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சேர்க்கை குறைந்து உள்ளதாக - 

மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர்  வே.ஈஸ்வரன் குற்றச்சாட்டு..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நீட் தேர்வுக்கு முன் நீட் தேர்வுக்கு பின் 

அண்ணாமலை கேட்ட விபரம் குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்ப்பில் நீட் தேர்வு குறித்து அரசு பள்ளி மாணவர்கள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.நீட் தேர்வு வந்த பிறகு சிபிஎஸ்சி மாணவர்கள் நீட் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருவதனால் அரசு பள்ளி மாணவர்களால் மருத்துவ படிப்பு படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.குறிப்பாக 2013,2014,2015 ஆகிய ஆண்டு காலங்களில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் படித்து வந்த நிலையில் நீட் தேர்வு வந்த பிறகு 87% அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பது தடையாக உள்ளது.நீட் தேர்வு முன்பு மருத்துவ படிப்பில் அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி மாணவர்கள் தான் அதிக அளவில் படித்து வருகிறார்கள்.நீட் தேர்வு இல்லாவிட்டாலும் கட்டணத்தை ஒழுங்குபடுத்த முடியும் என்றும் இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதி படிவதாலும் அவர்கள் நீட் கோச்சிங் மையத்திற்கு சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு மாணவர்களின் நலனை கருதி தமிழக மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top