ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்க லியாஃபி தென்மண்டல பொதுக்குழு கூட்டம்!
ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் சங்கத்தின் லியாஃபி தென்மண்டல பொதுக்குழு கூட்டம் சென்னையில் எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஓட்டலில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. சங்கத்தின் தென்மண்டல தலைவர் என்.பி. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தென் மண்டல செயலாளர் ஜே.கே.என். பழனி வரவேற்புரை ஆற்றினார். தென் மண்டல நிர்வாகிகள் இளையப்பன்,பரமசிவம், பாலசுப்பிரமணி, பாலகிருஷ்ணன், குமணன் ,அஜயகுமார், தென்மண்டல பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.அகில இந்திய முகவர் சங்கத்தின் தலைவர் ரன்வீர் சர்மா, பொதுச் செயலாளர் மார்கண்டேயலு, அரசியல் குழு தலைவர் கஜபதி ராவ்,நிதிக்குழு தலைவர் வி.ட்டி. கலைச்செல்வன் எக்ஸ் எம்எல்ஏ ,தென் மத்திய மண்டல தலைவர் வேணுகோபால் ரெட்டி உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சூர்,கோழிக்கோடு, திருவனந்தபுரம்,ஆகிய கோட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டனர். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.1.எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ஏற்கனவே வழங்கி வரும் போனஸ் தொகையினை குறைக்காமல் மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்.
2.பாலிசி மீதான கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகிதம் 9.5 சதவீதத்தில் வசூலிக்கப்படுகிறது. இது வங்கி கடனை விட வட்டி விகிதம் அதிகமாக உள்ளதால் இதனை குறைத்து 5 சதவீதமாக வசூலிக்க வேண்டும்.
3.முகவர்களுக்கான குழு காப்பீட்டு தொகையை 25 லட்சமாக உயர்த்த வேண்டும். மேலும் குழு காப்பீட்டுக்கான வயது வரம்பு முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். முகவர்கள் குறைகளை சங்க பிரதிநிதிகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அழைத்து பேச வேண்டும்.
4.முகவர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை உயர்த்த வேண்டும். பிராவிடண்ட் பண்ட், சேமநலநிதி ஆகியவை வழங்கப்பட வேண்டும்.
5.பாலிசி மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்.
முடிவில் தென் மண்டல துணைத் தலைவர் ஆர் பரமசிவம் நன்றி உரையாற்றினார்.
