பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, கர்ப்பிணி தாய்மார்கள் அறை மற்றும் பிரசவ அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வி உமா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.