காட்பாடி தாலுகா வள்ளிமலை கிராம பகுதி சுற்றுவட்டார ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மேல்பாடி, வள்ளிமலை, பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, கொல்லப்பல்லி, மகிமண்டலம், அம்மவாரிபல்லி ஆகிய ஊராட்சிகளை சார்ந்த பொதுமக்களுக்கு வள்ளிமலை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, மின் இணைப்பு பெயர் மாற்றம் கோரி விண்ணப்பித்த பயனாளிகளின் மனு மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்ட நகல் ஆணையை வழங்கினர். இந்நிகழ்வின்போது வேலூர் மாநகராட்சி துணை மேயர் மா.சுனில் குமார், ஒன்றியக்குழுத்தலைவர் வேல்முருகன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூர்த்தி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
