தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றிய மேற்பார்வையாளர் க.செல்லக்கண்ணு தலைமையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்!!!
வட்டார வளமையத்தில் உள்ள 82பள்ளிகளிலும், 15வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, வாசிக்க தெரியாதவர்களுக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளானது நடைபெற்று வருகிறது. இந்த திட்டமானது ஜூலை 15ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது அனைத்து மையங்களிலும் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.மொத்தம் 1221 கற்போர்கள் இத்திட்டத்தின் கீழ் பயின்று வருவதோடு அவர்களுக்கான கையேடும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உத்தமபாளையம் ஒன்றியத்தின் பொறுப்பு மேற்பார்வையாளர் க.செல்லக்கண்ணு அவர்கள் தலைமையிலும், புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் க.புவனேஸ்வரி அவர்கள் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்று வருகிறது.
