குழந்தைகள் நல காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு எஸ்.பி.பங்கேற்ப்பு
7/17/2024
0
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தைகள் நல காவலர்கள் நியமிக்கப்பட்டு குழந்தைகளின் நலன் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.மணிவண்ணனின் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன் (தலைமையகம்) மற்றும் கோட்டீஸ்வரன் (இணையவழி குற்றப்பிரிவு), துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் (CWC) ஆகியோர்களின் முன்னிலையில் 16.07.2024 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் "பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" (BETI BACHAO BETI PADHAO-BBBP) என்ற திட்டத்தின் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசால் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கும், தரமான கல்வி, பாதுகாப்பு, பெண் சிசுக்கொலைகளை தடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளை கையாளும் முறைப்பற்றியும், குழந்தைகளுக்கான அவசர உதவி எண்:1098, பெண்களுக்கான அவசர உதவி எண்:181 பற்றியும் இப்பயிற்சி வகுப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உமா, சமூக நல அலுவலர், குமரேசன், மாவட்ட சமூக நல ஒருங்கிணைப்பாளர், நான்சி, பாலின சிறப்பு வல்லுநர் மற்றும் குழந்தைகள் நல காவலர்கள் கலந்து கொண்டார்கள். இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.