விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி பெற்றதற்கு காட்பாடியில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்று விக்கிரவாண்டி தொகுதியை திமுக வசம் தக்கவைத்தார் .இதற்கு முழு மூச்சாக பாடுபட்ட உயர் கல்வி துறை அமைச்சரும் ,திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவுமான டாக்டர் க. பொன்முடியின் தலைமையிலான திமுகவினர் பம்பரம் போல சுழன்று தேர்தல் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது, இந்த வெற்றி ஒரு மாபெரும் வெற்றி என்பதை குறிக்கும் வகையில் வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா தலைமையிலான திமுக நிர்வாகிகள் லோகநாதன் மற்றும் திமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டு வந்து பட்டாசுகளை வெடித்தும், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள், பொதுமக்கள் என்று அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்,