வேலூரில் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம்

sen reporter
0


 வேலூரில் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடக்கம் வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் அண்ணா சாலை, புகழ்பெற்ற வேலூர் ஊரிசு கல்லூரியில் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்ட தொடக்க விழா, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் 09.08.2024 தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்றிட, உயர்க் கல்வி பயிலும் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வேலூர் ஊரிசு கல்லூரியில் காணொலி காட்சி வாயிலாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலுவிஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு காணொளி காட்சியினை பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன் பெறும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரத்திற்கான காசோலை அட்டையினை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாணவர்களுக்கு வழங்கினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top