சென்னை:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 97 நபர்களுக்கும், என மொத்தம் 144 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
August 12, 2024
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 29 நபர்களுக்கும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 18 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள 97 நபர்களுக்கும், என மொத்தம் 144 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.பட, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., பேரூராட்சிகள் இயக்குநர் திரு.கிரண் குராலா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.