தென்காசி: கோயில் நிலங்கள் பாம்புகள் குடியிருக்கும் இடமாக மாறி வருகிறது.
August 03, 2024
0
தென்காசி மாவட்டம்,, மேலகரம் ஸ்டேட் பாங்க் காலனி 1வது விரிவாக்க பகுதியில் கோயில் இடம் பராமரிப்பு இல்லாமல் செடி கொடிகள் படர்ந்து விஷ பூச்சிகள் நடமாடும் பகுதியாக மாறி வருகிறது. மேலும் இப்பகுதியில் சுமார் 700 குழந்தைகள் படிக்கும் பள்ளி ஒன்று உள்ளது. கோவில் இடத்தின் வழியாக மாணவர்களும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். இது சம்பந்தமாக பல தடவை அறநிலையத்துறைக்கு தெரியப்படுத்தியும் கடந்த இரண்டு வருடங்களாக காரணங்கள் பல கூறி கோயில் வருமானத்துக்கு வழி வகுக்காமல் பராமரிப்பு இன்றி இருந்து வருகிறது. கடந்த 20 தினங்களுக்கு முன்பாக கோவில் இடத்தில் இருந்து விஷ பூச்சி அப்பகுதியின் வீட்டில் நுழைந்தது உடனடியாக தீயணைப்பு துறைக்கு தெரியப்படுத்தி அவர்கள் வந்தும் பாம்புகளை பிடிக்க முடியவில்லை. இதை பற்றி அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் பெயரளவில் இடத்தை அளவீடு செய்து சென்று விட்டார்கள். இப்பகுதி மக்கள் உடனடியாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அறநிலைத்துறைக்கு தெரியப்படுத்தியும் அற நிலைய துறை அதிகாரிகள் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது நாங்கள் மெதுவாகத்தான் செய்வோம் பண்ட் இல்லை என்று அலட்சியமாக பதில் கூறியதுடன் அப்பகுதி சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று பெரிய மலைப்பாம்பு ஒன்று கோயில் இடத்தில் இருந்து இரவு 9 மணி அளவில் தெருவை கடந்தது அப்பகுதி மக்களுக்கு மிகவும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது கோயிலுக்கு வருமானம் இல்லை என்று கூறி கோயில் இடத்தை ஏலம் விடாமல் இப்படி பராமரிப்பு என்று இருப்பது அப்பகுதி மக்களுக்கும் மாணவர்களுக்கும் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது. விபரீதங்கள் நடப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இப்படி கோயில் இடங்கள் தென்காசி சுற்றுப்பகுதிகளில் ஏராளமாக உள்ளது. மேலும் கோயில் இடங்கள் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதையும் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சென்றாலும் அவர்கள் கூறும் வார்த்தை வியப்பாக உள்ளது. எங்களால் ஒன்றும் செய்ய இயலாது இப்படி தென்காசி பகுதியில் அறநிலையத்துறை செயல்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதுடன் அப்பகுதியினை பராமரிக்க வேண்டும் மற்றும் விஷ பூச்சிகளிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்ற பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.